தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ
வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன
எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங்
குழலாள், அபிராமி, கடைக்கண்களே,
SWAMI SIVANANTHAR THAVAVANAM - Kg Tasek, Pengkalan Hulu, Perak, Malaysia
.அடியேனின் ஆன்மிகப் பயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இடம் 'சிவானந்தர் ஆசிரமம்' ஆகும். இதைப்பற்றி இங்கு நான் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். நம் நாட்டில் பலருக்கு இப்படியொரு ஆசிரமம் இருப்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய ஆன்மிகப் பயணத்தில் பல அற்புதங்களை நான் சந்தித்த இடம் இதுவேயாகும்.
ஆசிரமத்திற்குச் சற்றுத் தள்ளி ஓடிக்கொண்டிருக்கும் குளிர்ந்த நீரோடையின் ஓரம் அமர்ந்து தியானம் செய்வது மிகவும் உகந்தது. அங்கு உயர்ந்து நிற்கும் ருத்ராட்ச மரங்கள், அந்த ஈசனே நேரில் அமர்ந்திருக்கும் திருக்கோலம் போலக் காட்சியளிக்கும். பாவாடை சுவாமிகளின் சமாதி, அற்புதமான இயற்கைக் காட்சிகள், வளர்பிறை நாட்களில் வானில் ஒளிவீசும் நட்சத்திரங்கள் மற்றும் நிலவின் ஒளியில் உலாவுவது என அனைத்தும் மறக்க முடியாத அனுபவங்களாகும்.
தெய்வீக அதிர்வுகள் நிறைந்த அந்த இடத்திற்கு அருகில் ஓர் அழகிய புத்தர் கோயிலும் உள்ளது. ஆன்மிக அன்பர்கள் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக ஒருமுறை அங்குச் சென்று வாருங்கள்.
https://www.youtube.com/watch?v=RHKJIL_KgZ4&t=109s
No comments:
Post a Comment