பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே.
தினமும் குறைந்தது ஐந்து நிமிடமாவது தியானம் அல்லது பிரார்த்தனைக்காக ஒதுக்குங்கள்.
காலையில் கண் விழிக்கும்போது உங்கள் குலதெய்வம், இஷ்டதெய்வம் அல்லது குருவின் திருநாமத்தைச் சொல்லி நன்றியுடன் எழுந்திருங்கள்.
தினமும் 10 நிமிடமாவது தனிமையில் மௌனமாக அமர்ந்து பழகுங்கள். இது உங்களை நீங்களே உணர உதவும்.
எப்போதும் நல்லதையே நினையுங்கள். உங்கள் எண்ணங்களே உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கின்றன.
உங்கள் மீதும், உங்கள் உழைப்பின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள்.
பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள்.
முடிந்தவரை சைவ உணவைத் தழுவுங்கள்; இயலாவிடில் வாரத்தில் ஒரு நாளாவது புலால் தவிர்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
கடமையைச் சரியாகச் செய்யுங்கள்
தேவையற்ற கெட்ட பழக்கங்களை நீக்கி, மனதையும் உடலையும் எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
மாத வருமானத்தில் ஒரு சிறு பகுதியையாவது (தர்மமாக) இல்லாதவர்களுக்கு வழங்குங்கள்.
மாதமொருமுறை ஆசிரமங்கள், அனாதை இல்லங்கள் அல்லது முதியோர் இல்லங்களுக்குச் சென்று உங்களால் முடிந்த உதவிகளை நேரில் செய்யுங்கள்.
எவ்வுயிரையும் கொல்லாதீர்கள் (ஜீவவதை வேண்டாம்).
முடிந்தால் தினமும் காகம், குருவி, நாய், பூனை அல்லது எறும்புகளுக்கு உணவிடுங்கள்.
இயற்கையை நேசியுங்கள்.
உங்கள் வாழ்வின் அடையாளமாக ஒரு செடியையாவது நட்டு வளருங்கள்.
வீண் பேச்சைக் குறையுங்கள். தேவையற்ற பேச்சுகளே பல சிக்கல்களுக்கு மூல காரணமாகின்றன.
வாரத்தில் ஒரு முழு நாளை உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கழிக்க ஒதுக்குங்கள்.
கோபம் வரும்போது அந்த இடத்தை விட்டு அமைதியாக நகர்ந்து விடுங்கள் அல்லது உங்கள் குலதெய்வத்தை நினையுங்கள்.
செல்வம் இருக்கிறது என்பதற்காக வீணாக்காதீர்கள்.
எதிர்காலத்திற்காகச் சேமிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
இருப்பதை வைத்துச் சிறப்பாக வாழ முயலுங்கள், அதுவே மனநிறைவைத் தரும்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment