Saturday, 14 March 2026

நீங்கள் கொடுத்தது...




 தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத

வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்

கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்

செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.











Sunday, 22 February 2026

தர்மம் ....

 


அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது 

அல்ல என்கை நன்றே உனக்கு? இனி நான் என் செயினும்

நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-

ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே










 




Thursday, 1 January 2026

குலதெய்வம் (மூன்றாம் பாகம் )

 

கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த

படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்

பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.

அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.


குலதெய்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை ?


குலதெய்வம் எதுவென்று தெரியாத நிலையில் பலர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு அடியேனின் ஆலோசனை என்னவென்றால், உங்கள் குலதெய்வத்தைத் தேடி காலத்தையும், பொருளையும் வீணடிக்காதீர்கள்.குலதெய்வத்தை வணங்கினால் மட்டுமே பிரச்சனைகள் தீரும், வாழ்வில் முன்னேற முடியும் என்று கலங்க வேண்டாம். குலதெய்வம் தெரியாத சூழலில், உங்கள் இஷ்ட தெய்வத்தையே குலதெய்வமாக ஏற்று வழிபடுவது சாலச்சிறந்தது. அந்த தெய்வத்தின் அருளால் நீங்கள் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ்வீர்கள்.


அடியேனுக்குத் தெரிந்தவரை, ஒருவருக்குக் குலதெய்வம் தன்னை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு நான்கு முக்கியக் காரணங்கள் இருக்கலாம்:

1. உங்கள் பரம்பரையினர் யாராவது குலதெய்வத்திற்குச் சாபம் கொடுத்திருக்கலாம்.

2. முன்னோர்களுக்குள் ஏற்பட்ட தகராறால் குலதெய்வக் கோவில் பூட்டப்பட்டிருக்கலாம்.

3. குலதெய்வக் கோவில் முறையாகப் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து இருக்கலாம்.

4. ஒருவருடைய கர்மவினையின் காரணமாகவும் குலதெய்வம் தன்னை வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.


இதற்கு விமோசனம் எப்போது?


உங்கள் வம்சாவளியில் ஏழு தலைமுறைகள் முடிந்தவுடன், குலதெய்வ வழிபாடு தானாகவே மறுபடி தொடரும். (ஒரு தலைமுறை என்பது, பெற்றோர்கள் குழந்தை பெற்று, அந்தக் குழந்தைகள் வளர்ந்து, அவர்களும் அடுத்த தலைமுறையை உருவாக்கும் காலத்தைக் குறிக்கும்).


குலதெய்வ அருள் பெற மண்டல வழிபாடு:


தேவையான பொருட்கள்: கோவில் பிரசாதம் (விபூதி), செம்பு அல்லது வெள்ளித் தட்டு, அகல் விளக்கு,  இலுப்பை எண்ணெய் (கிடைக்காவிடில் நல்லெண்ணெய்), சிறிய செம்புத் தம்ளர் (நீர் நிரப்பியது), மற்றும் நறுமணமிக்க மலர்கள்.

செய்முறை: விபூதியை ஒரு செம்பு அல்லது வெள்ளித் தட்டில் வைத்துப் பூஜை அறையில் வைக்கவும். சிறிய செம்புத் தம்ளரில் சுத்தமான நீரை நிரப்பி வைக்க வேண்டும். இந்த நீரைத் தினமும் மாற்றி, பழைய நீரைச் செடிகளுக்கு ஊற்றிவிட வேண்டும்.

தீபம் ஏற்றும் முறை: அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி, கிழக்கு அல்லது மேற்கு நோக்கித் தீபம் ஏற்றவும். தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். அதன் பிறகு அணைப்பதும் அல்லது தொடர்ந்து எரிய விடுவதும் உங்கள் விருப்பம்.

வேண்டுதல்: தீபத்தை ஏற்றி வைத்து, “என்னுடைய குலதெய்வம் எந்த எல்லையில் இருந்தாலும், எத்திசையில் இருந்தாலும் எனக்கு அருள் புரிய வரவேண்டும்” என்ற வார்த்தைகளை 108 முறை மனமுருகிச் சொல்லவும்.

கால அளவு: இவ்வழிபாட்டை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து செய்ய வேண்டும்.

நேரம்: காலை 5:00 - 6:00 அல்லது மாலை 7:00 - 8:00 மணிக்குள் செய்ய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்தைத் தினமும் மாற்றாமல் கடைபிடிப்பது அவசியம்.

முக்கிய குறிப்பு: ஏதேனும் ஒரு நாள் வழிபாட்டைத் தவறவிட்டால், மீண்டும் முதலிலிருந்தே (முதல் நாளிலிருந்து) ஆரம்பிக்க வேண்டும்.

இந்த வழிபாட்டை ஒரு மண்டலம் முழுமையாகச் செய்து முடித்தால் அல்லது முடிவதற்கு முன்பே, உங்கள் குலதெய்வம் பற்றிய தகவல் ஏதேனும் ஒரு வழியில் உங்களை வந்தடையும்.


குலதெய்வம் உங்களை வந்தடைவதை உணர்த்தும் அறிகுறிகள்:

வழிபாட்டின் போது அல்லது அதற்குப் பிறகு பின்வரும் நிலைகளின் மூலம் உங்கள் குலதெய்வம் தன்னை வெளிப்படுத்தலாம்:


கனவுகள்:


o குலதெய்வம் உங்கள் பெயருடன், ஒரு மனித வடிவில் தோன்றி உங்களுக்குக் காட்சி கொடுக்கலாம்.

o தெய்வம் குடியிருக்கும் குறிப்பிட்ட கோவிலையே கனவில் காட்டி உங்களுக்கு உணர்த்தலாம்.


மனிதர்கள் மூலமாக வரும் செய்திகள்:


o அறிமுகமில்லாத ஒரு ஆண் அல்லது பெண் உங்களிடம் வந்து தானாகவே உங்கள் குலதெய்வத்தைப் பற்றிப் பேசுவார்கள்.

o சில நேரங்களில் சாதுக்கள், சன்னியாசிகள், யாசிப்பவர்கள் அல்லது சிறு குழந்தைகளின் வடிவில் உங்களுக்குத் தேவையான செய்திகள் வந்து சேரும்.

o உங்கள் காதுகளில் கேட்கும்படியாக, உங்களுக்கு அருகாமையில் யாராவது இருவர் உங்கள் குலதெய்வத்தைப் பற்றித் தற்செயலாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

நேரடி நிகழ்வுகள்:

o முற்றிலும் தெரியாத ஒருவர் உங்களிடம் வந்து, "நான் இந்தத் திருக்கோவிலில் இருந்து வருகிறேன்; உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்" என்று கேட்கலாம்.

o ஒருவர் உங்களிடம் ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி, அந்தத் தெய்வம் வீற்றிருக்கும் கோவில் எங்கே இருக்கிறது என்று வழி கேட்கலாம்.


நம்பிக்கையும் நற்பலனும்:


இன்றைய காலகட்டத்தில் இவையெல்லாம் நடக்குமா? என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக, இன்றும் இவை பலருக்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நீங்கள் மேற்கொள்ளும் அந்த மண்டல வழிபாட்டின் போதே இவை உங்களுக்கு ஒவ்வொன்றாக உணர்த்தப்படும்.

உங்கள் குலதெய்வம் எதுவென்று தெரிந்த பிறகு, அந்தத் தெய்வத்தின் உருவப் படத்தை வாங்கிப் பூஜை அறையில் வைத்துத் தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். இவ்வழிபாட்டைத் தொடங்கும் முன், உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியைப் பெற்றுத் தொடங்குவது இன்னும் சிறப்பு.








விண்ணோடு வந்தது ....









ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்

காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு

சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்

நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.













Tuesday, 14 October 2025

என்னுடைய துன்பங்களும் துயரங்களும் நீங்க என்ன வழி ?

 



தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை

ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-

கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு


துன்பங்கள் நீங்கி வாழ்வில் ஒளியேற எளிய வழிகள்


"என்னுடைய துன்பங்களும் துயரங்களும் எப்போது நீங்கும்? தொட்டதெல்லாம் தடையாக நிற்கிறது, வாழ்க்கையில் முன்னேறவே முடியவில்லை. எல்லா கோவில்களுக்கும் சென்று வந்தாகிவிட்டது, சொல்லப்பட்ட பரிகாரங்கள் அனைத்தையும் செய்து பார்த்துவிட்டேன். காசி கங்கையிலும், ராமேஸ்வரத்திலும் புனித நீராடியும் பலனில்லை; வாழ்வில் விரக்திதான் மிஞ்சுகிறது" - இப்படி வருத்தப்படும் மனிதர்கள் பலர் உண்டு. அவர்களுக்கு அடியேன் சில வழிகளைக் கூறுகிறேன். நம்பிக்கையோடு செய்யுங்கள், உங்கள் பிரச்சினைகளுக்கு இறையருளால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.


1. குலதெய்வ வழிபாடு

தினமும் வீட்டில் அமர்ந்து ஒரு ஐந்து நிமிடமாவது உங்கள் குலதெய்வத்தை நினைத்து உருக்கமுடன் பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால் மாதம் ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு நேரில் சென்று வழிபடுங்கள். குலதெய்வத்திற்குப் பிரபஞ்சத்தில் மிகப்பெரிய ஆற்றல் உண்டு; அதுவே உங்கள் முதல் கவசம்.


2. பறவைகளை விடுவித்தல்

பறவைகளை விற்பனை செய்யும் கடைக்குச் சென்று, ஒரு ஜோடி பறவைகளை வாங்கி, அவற்றை அருகில் உள்ள வனப்பகுதியிலோ அல்லது மரங்கள் நிறைந்த இடத்திலோ பறக்க விடுங்கள். பறக்கவிடும் முன், அந்தப் பறவைகளை உங்கள் முகத்திற்கு நேராகக் கைகளில் ஏந்தி, உங்கள் குறைகள் நீங்க வேண்டிக்கொண்டு மேலே விடுங்கள். இதனை மாதம் ஒருமுறை அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று செய்வது சிறப்பு. இயலாதவர்கள் சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் அல்லது சதுர்த்தி திதிகளிலும் இதனைச் செய்யலாம். ஒரு ஜீவனைச் சிறையிலிருந்து விடுவிப்பது உங்கள் கர்மவினைகளை நீக்கும்.


3. காலணி தானம்

மாதம் ஒருமுறை அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று, காலணி இல்லாமல் நடக்கும் ஏழை எளியவர்களுக்குப் புதிய செருப்புகளை வாங்கித் தானம் கொடுங்கள். அது இயலாத பட்சத்தில், ஒரு ஜோடி புதிய காலணிகளை வாங்கிச் சிவன் அல்லது காலபைரவர் கோவில்களின் ஓரத்தில் யாரும் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் வைத்துவிடுங்கள்; அல்லது மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்களில் வைத்துவிடுங்கள். சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் அல்லது சதுர்த்தி நாட்களிலும் இதனைச் செய்யலாம்.


4. எறும்புகள் மற்றும் பறவைகளுக்கு உணவளித்தல்

தினமும் எறும்புகளுக்கும், காடு அல்லது மொட்டை மாடிகளுக்கு வரும் பறவைகளுக்கும் உணவளியுங்கள். நினைவில் கொள்க, இவை கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் பறவைகள் அல்ல; இயற்கையில் சுதந்திரமாக வாழும் உயிரினங்களாக இருக்க வேண்டும்.


5. கல் உப்புப் பரிகாரம் (திருஷ்டி நீக்கம்)

தினமும் அதிகாலை (05:00 - 06:00 மணிக்குள்) குளித்து முடித்த பின், ஒரு பிடி கல் உப்பை எடுத்துக் கொள்ளவும். உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து, உங்கள் தலையை இடதுபுறம் மூன்று முறையும், வலதுபுறம் மூன்று முறையும் சுற்றித் திருஷ்டி கழிக்கவும். பின் அந்த உப்பை ஒரு தட்டில் உள்ள நீரில் கரைத்து, மனிதர்களின் கால் படாத இடத்திலோ அல்லது செடி கொடிகள் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்திலோ ஊற்றிவிடவும். அந்தத் தட்டைப் பூசை அறை அல்லது சமையல் போன்ற வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது; இதற்கெனத் தனியாக ஒரு தட்டை வைத்துக் கொள்ளவும்.


6. விரால் மீன் விடுவித்தல்

மாதம் ஒருமுறை அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று, சந்தைகளில் விற்கப்படும் "விரால் மீன்களை" (வயல், குளம், ஏரி அல்லது ஆறுகளில் பிடிக்கப்பட்டவை) வாங்கி, ஏதேனும் ஒரு பாதுகாப்பான நீர்நிலையில் விடுங்கள். மீனை நீரில் விடும்போது மிகவும் மென்மையாக விட வேண்டும்; தூக்கி வீசக் கூடாது. இதற்கு மற்ற வகை மீன்களைப் பயன்படுத்தக் கூடாது; ஏனெனில் "விரால் மீன்" மட்டுமே எந்தச் சூழலிலும் உயிர்வாழும் அதீதத் தன்மையைக் கொண்டது. ஒரு உயிரைச் சாவிலிருந்து காப்பது உங்கள் கர்ம வினைகளைக் குறைக்கும். (இதனைச் சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் அல்லது சதுர்த்தி திதிகளிலும் செய்யலாம்).


7. உணவு மற்றும் உடை தானம்

மாதம் ஒருமுறை அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று, வசதியற்ற ஏழை எளியவர்களுக்கு மனமுவந்து உணவு அல்லது புத்தாடைகளை வாங்கிக் கொடுங்கள். உங்களால் முடிந்த சிறிய உதவியும் ஒருவரின் பசியைத் தீர்க்கும்போது, அது உங்களுக்குப் பெரும் புண்ணியத்தைத் தேடித்தரும். (இதனைச் சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் அல்லது சதுர்த்தி திதிகளிலும் செய்யலாம்).


8. திருநங்கைகளிடம் அரிசி பெற்று எறும்புகளுக்கு உணவிடுதல்

மாதம் ஒருமுறை அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று, ஒரு திருநங்கையைச் சந்தித்து அவரிடம் இருந்து ஒரு படி அரிசியை விலைக்கு (அதற்கான தொகையை வழங்கி) வாங்கிக் கொள்ளுங்கள். அந்த அரிசியில் இருந்து ஒரு பிடி எடுத்து நீரில் ஊறவைத்து, பின் மாவாக இடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் மற்றும் சர்க்கரை சேர்த்து இந்த மாவைக் கலந்து நன்றாக உலர வைக்கவும். இந்த இனிப்புக் கலவையை எறும்புப் புற்றுகள் உள்ள இடத்தில் எறும்புகளுக்கு உணவாக இடவும். (சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் அல்லது சதுர்த்தி திதிகளிலும் இதனைச் செய்யலாம்).


9. நீர்நிலை மீன்களுக்கு அவல் பொரி அளித்தல்

மாதம் ஒருமுறை அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று, அவல் அல்லது பொரி வாங்கி மனித நடமாட்டம் இல்லாத இயற்கையான நீர்நிலைகளில் (காட்டு ஓடைகள், ஏரிகள், குளங்கள் அல்லது ஆறுகள்) வாழும் மீன்களுக்கு உணவாகப் போடுங்கள். ஒருபோதும் நீங்கள் வசிக்கும் தெருக்களில் உள்ள சாக்கடைகளிலோ அல்லது அசுத்தமான வாய்க்கால்களிலோ போடக்கூடாது. மேலும், இவை தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன்களாக இருக்கக் கூடாது. (சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் அல்லது சதுர்த்தி திதிகளிலும் இதனைச் செய்யலாம்).


10. காப்பகங்களுக்கு உதவுதல்

மாதம் ஒருமுறை அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று, முதியோர் இல்லங்கள் அல்லது ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு உங்களால் இயன்ற உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள். உங்களின் சிறு பங்களிப்பு அவர்களின் ஒருவேளைப் பசியைத் தீர்க்கும் பெருந்துணையாக அமையும். (சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் அல்லது சதுர்த்தி திதிகளிலும் இதனைச் செய்யலாம்).


எளியவர்களுக்கான வழி:

"நான் மிகவும் ஏழை, என்னிடம் போதிய வசதி இல்லையே; என்னைப் போன்ற வறுமையில் இருப்பவர்களுக்கு எளிய பரிகாரங்கள் இல்லையா?" என வினவும் மனிதர்களுக்கு... உங்களுக்கும் எளிய, ஆனால் மிக வலிமையான வழிகள் உண்டு!

வறுமையில் இருப்போர் செய்ய வேண்டிய மிக எளிய வழிகள்


தினமும்...

1. நீங்கள் உண்ணும் உணவில் இருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து, உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு ஏதேனும் ஒரு எறும்புக்காவது உணவாக இடுங்கள்.


தினமும்...

2. உங்கள் குலதெய்வத்தை நினைத்து, ஒரு சிறு கிண்ணத்தில் தூய நீரை நிரப்பி உங்கள் வீட்டின் வெளியிலோ அல்லது மொட்டை மாடியிலோ வையுங்கள். உங்கள் கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத ஜீவன்கள் அந்த நீரைப் பருகித் தாகம் தணித்துச் செல்லட்டும்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

இவற்றை ஒன்பது அமாவாசை அல்லது ஒன்பது பௌர்ணமி மட்டும் செய்தால் போதுமா?

இல்லை, இவற்றைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்; இடைவிடக் கூடாது. நீங்கள் இப்பூமியில் வாழும் காலம் வரை இவற்றை ஒரு கடமையாகச் செய்யுங்கள்.

பட்டியலிடப்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டுமா?

அவசியமில்லை. மேலே குறிப்பிட்டுள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து, அதனைத் தடையின்றித் தொடர்ந்து செய்து வாருங்கள்.

மாதமொருமுறைதான் செய்ய வேண்டுமா?

உங்களுக்கு வசதியும் வாய்ப்பும் இருந்தால் வாரமொருமுறை கூடச் செய்யலாம். இந்தப் பரிகாரங்களைக் காலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே செய்ய வேண்டும்; மற்ற நேரங்களில் செய்வதைத் தவிர்க்கவும்.

இதன் பலன்கள்:

தொடர்ந்து ஒன்பது அமாவாசை அல்லது ஒன்பது பௌர்ணமி கடந்த பிறகு, உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர முடியும். உங்கள் கர்மவினையின் தாக்கம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அதனைத் தடுத்துக் கட்டுப்படுத்தும் அதீத ஆற்றல் இந்த எளிய முறைகளுக்கு உண்டு.


மாற்றம் என்பது எப்படி இருக்கும்?

மாற்றம் ஏற்படும் என்றால், திடீரெனக் கூரையைப் பிய்த்துக்கொண்டு பணம் கொட்டாது அல்லது பூமியைப் பிளந்துகொண்டு புதையல் வராது. மாறாக, இச்செயல்களைச் செய்வதன் மூலம் உங்களுக்குத் தெளிவான சிந்தனை பிறக்கும். அந்தத் தெளிவே உங்கள் சிக்கல்களிலிருந்து விடுபடப் புதிய வழிகளைக் காட்டும். அந்த உதவி எந்த உருவத்திலும், எந்த நேரத்திலும் உங்களைத் தேடி வரும்.


அடியேன் கூறும் இந்த முறைகளை முழு நம்பிக்கையோடு செய்யுங்கள். எல்லாம் வல்ல ஈசனின் அருளால் உங்களுக்கு நிச்சயம் நல்வழி பிறக்கும். நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும்.


வாழ்க வளமுடன்!








Thursday, 19 January 2023

"பசித்தால் மட்டுமே புசி!"

 


















உன் பார்வையில் அது பிழையாக இருக்கலாம்...":

 





















நிதர்சனம்......

 

மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்

புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை

சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,

பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.























நல்லது செய்யத் நினைத்துவிட்டால் ....

 
















Sunday, 15 January 2023

50 வயது 'இளம்' சிங்கங்களுக்கு...

 


வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,

இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்

பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு

விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.










மனிதநேயம்....

 


கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்

யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய

சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்

ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.












எப்பொழுதும் பிறரை பற்றி...

 


ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,

போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,

காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.





















சிறிய உதவி & பெரிய உதவி ...

 

ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்

தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்

முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்

மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே.




















இறை மொழி ....

 

வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்

பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு--

வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த

சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.





















உண்ணும் உணவை .....

 


அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்

பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்

குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--

இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?

















செலவும் & சேமிப்பும் ...

 

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து

மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி

வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்

பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.













" மனம் மாற ஒரு நொடி!

 

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்

அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்

கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,

துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.











நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...