சீர்கொண்ட வாழிமிசை பள்ளிகொண்ட
திருமாலு முண்டகமிடை ,யூரிகொண்ட,
நான்முகனும் பரந்து உடைக்கொண்ட
சிந்தையோடுதே,பேர்கொண்ட வன்னி
மலைநாதர்நாம மிசைகொண்டமின்ன
லிடையாய் ,வார்கொண்ட உண்ணாமுலை
நாமதேவி வரவேண்டுமெனன்னருகே .
மனிதப்பிறவி...........
அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
"இது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்... அவ்வைப்பிராட்டியின் ஒப்பற்ற பொன்மொழிகள். மனிதப் பிறவி மற்றப் பிறவிகளைவிடச் சிறந்ததாகும். மனிதனால் மட்டுமே நன்மை தீமைகளை அறிய முடியும்; பகுத்தறிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு.
மனிதனாகப் பிறப்பதே பெரும்பேறு; அதிலும் ஊனமில்லாத உடல் அமைவது அதைவிடப் பெரும் பாக்கியமாகும். உங்களுடைய பூர்வ புண்ணியத்தின் பலனாகவே இந்த மனிதப் பிறவி கிடைத்துள்ளது. 'ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம்' என்றில்லாமல், நீங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, அந்த வாழ்க்கை நீங்கள் பெருமைப்படக்கூடியதாக இருக்க வேண்டும்; மாறாக வருத்தப்படக்கூடியதாக இருக்கக்கூடாது. உங்களைப் பார்த்து நான்கு பேர் நல்லவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு ஏதேனும் செய்யுங்கள் அல்லது சக மனிதனுக்கு உதவுங்கள். முடிந்தால் தான தர்மம் செய்யுங்கள்; முடியாவிட்டால் மற்றவர்கள் செய்வதையாவது தடுக்காதீர்கள்.
ஒரு மனிதன் மனிதனாக வாழத் தேவைப்படுவது மன ஒழுக்கம், சொல் ஒழுக்கம் மற்றும் செயல் ஒழுக்கம். இதற்கு மிக மிக அவசியமானது இறைவழிபாடு. அதனை காலம் கடந்த பின் தேடுவதைவிட, இளம் வயதிலேயே தொடங்கிவிடுங்கள். 'மனிதப் பிறவி அமைவது பெரும் பாக்கியம் என்றால், எனக்கு ஏன் இந்தத் துன்பம்? ஏன் இந்தக் குடும்பத்தில் வந்து பிறந்தேன்? எனக்கு ஏன் இந்த ஏழ்மை நிலை? ஏன் இந்தக் கொடிய வியாதி? ஏன் இந்த நரக வாழ்க்கை? மற்றவர்கள் நன்றாக வாழ்கிறார்களே, நான் மட்டும் ஏன் இப்படி அவஸ்தைப்படுகிறேன்?' என்ற கேள்விகளுக்குப் பதில் - அது நம்முடைய 'கர்மா'. கர்மா என்றால், முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இப்பிறவி அமைகின்றது என்று பொருள்.
கர்மாவைப் பற்றி அடுத்த வரும் பகுதிகளில் விரிவாகச் சொல்கிறேன்."
No comments:
Post a Comment